×

அமெரிக்கா செல்ல விசா கிடைப்பது தாமதமாகும்: தூதரகம் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா பரவல் குறைந்திருப்பதைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளன. 2 டோஸ் தடுப்பூசி போட்ட வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நடைமுறை வரும் 8ம் தேதி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் 8ம் தேதி நடைமுறைக்கு வரும் புதிய பயண கட்டுப்பாடு கொள்கையின்படி, விசா வைத்திருக்கும் 30 லட்சம் இந்தியர்கள், 2 டோஸ் தடுப்பூசி ஆவணத்துடன் அமெரிக்கா வர தகுதியானவர்கள் ஆவர்.

கொரோனா தொடர்பான குறுக்கீடுகளில் இருந்து மீண்டு வரும் நிலையில், எங்கள் தூதரகங்களில் விசா பெறுவதற்கான காத்திருப்பு காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விண்ணப்பதாரர்களுக்கும், எங்கள் ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு அம்சங்களுடன் எங்கள் திறனை மேம்படுத்தும் வரையில் மக்கள் பொறுமையுடன் காத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : US , US, Visa, Embassy
× RELATED அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...