புதுவையில் 100% பார்வையாளருடன் தியேட்டர்கள் இயங்க அரசு அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் மாநில செயற்குழு  உறுப்பினரும், நிவாரணம்  மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான அசோக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு: புதுவையில் கொரோனா  தொற்று குறைந்து வருவதால்,  தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர்  15 வரை  நீட்டிக்கப்படுகிறது. திரையரங்குகள், வணிக வளாகங்கள் கொரோனா  விதிமுறைகளை பின்பற்றி நள்ளிரவு 12.30 மணி வரை 100 சதவீத பார்வையாளர்களுடன்  இயங்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: