தீவிபத்தில் 2 கார்கள் நாசம்

தாம்பரம்: ஓஎம்ஆர் சாலையிருந்து, நேற்று அதிகாலை, தாம்பரம் நோக்கி, விஷ்ணு (28) என்பவர் காரில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் 2 பேர் இருந்தனர்.  இரும்புலியூர் மேம்பாலத்தில் சென்றபோது, திடீரென காரின் இன்ஜினில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. உடனே காரை நிறுத்திவிட்டு மூவரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

 இதேபோல் பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று அதிகாலை ஜிஎஸ்டி சாலையில் வண்டலூர் நோக்கி சென்ற கார், திடீரென  தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்ததும் டிரைவர் பாலாஜி காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பினார். கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

Related Stories: