×

சூரியன் எப்.எம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

சென்னை: சென்னை சூரியன் எப்.எம். 93.5 நேயர்களுக்கு தினம்தோறும் பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை வழங்குவதோடு, சமுதாய நலன் கருதி எஸ்எம்எஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தீபாவளி நெருங்குவதால் நாளுக்கு நாள் சென்னையின் பெரும்பாலான வணிக பகுதிகளில் கூட்டம் கூடுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு இந்த தீபாவளியை எஸ்எம்எஸ் உடன் கொண்டாட வேண்டும், அதாவது எஸ்.எம்.எஸ் - சோப்பு, மாஸ்க், சமூக இடைவெளி என்பதை முன்னிறுத்தி புதுமையான முறையில் “ரெடி- ஸ்டெடி- வெடி எஸ்எம்எஸ்  உடன்” வாகனம் மூலம்  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

அதில் சிறப்பம்சமாக, பொதுமக்களில் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுபவர்களுக்கு சூரியன் எப்.எம். சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.பொழுதுபோக்கிற்காக மட்டும் அல்ல மக்கள் நலனிற்காகவும் சூரியன் எப்.எம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தங்களின் வரவேற்பினை தெரிவித்துக் கொண்டனர். சூரியன் எப்.எம்-ன் கொரோனா விழிப்புணர்வு வாகனம் தொடர்ந்து நகரின் பல பகுதிகளில் 30ம் தேதி வரை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரேடியோவிலும் “ரெடி- ஸ்டெடி- வெடி” நிகழ்ச்சியில் பங்குபெற்று பரிசுகளை பெறலாம்.

Tags : Corona ,Sun FM , Sun FM, Corona, Awareness
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...