உடல் நலம் தேறியதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் வீடு திரும்பினார்

டெல்லி: உடல் நலம் தேறியதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் வீடு திரும்பினார். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் அவர்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மன்மோகன் சிங் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும் டெங்குவால் அவருடைய இதயம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை இதய நோய் வல்லுநர் நிதீஷ் நாயக் பரிசோதித்து வந்தார். அவருக்குக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு டெங்கு உறுதி ஆகி அதற்கும் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது உடல்நிலை தேறி பூரண குணமடைந்துள்ளார். நன்கு உடல் நலம் தேறியதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் வீடு திரும்பினார்.

Related Stories:

More