×

ரஜோரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஜம்மு: ரஜோரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கண்ணிவெடி விபத்தில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பாதையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. நவ்ஷேரா செக்டார் கலால் பகுதியில் உள்ள ராணுவ முன்கள நிலை அருகே நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரோந்து சென்றபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அப்பகுதியில் ராணுவத்தால் புதைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் இருப்பதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Rajori District , Two soldiers killed in a landmine accident in the Rajouri district border control line area
× RELATED கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ போர்ட்டர்கள் படுகாயம்