×

கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வீடு தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

கூடலூர்: கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வீடு தேடி கல்வித் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. 1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இடையே கொரோனா நோய்த்தொற்று காலத்தால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுகட்டும் வகையில் இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டம்  முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் 30 கிராமங்களில் நடைபெற்று வருகிறது.

பாட்டு, நாடகம், ஒயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  வீடு தேடி கல்வி திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தாசில்தார் ஜான் மனோகரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் அய்யப்பன் தொடங்கி வைத்தார்.  பின்னர் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் வீடு தேடி கல்வி திட்டம் குறித்து விளக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். இது குறித்து வீடுதேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறியதாவது:கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர்.

கல்வியறிவு பெறுவதில் தடை ஏற்பட்டது. ஆன்-லைன் வகுப்புகள் நடைபெற்றாலும் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் குறைந்தது. தற்போது அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுத்ததால் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்வதற்கான சூழலை வீடு தேடி கல்வி திட்டம் மூலம் தன்னார்வலர்கள் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெற்றோர் தங்களின் குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து புளியம்பாறை, தந்தட்டி, தருமகிரி ஆகிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Tags : Cuddalore Government High School ,Search , Cuddalore, Education Project Awareness
× RELATED கந்தர்வகோட்டை அருகே குரும்பூண்டி...