×

சிவபெருமான் பூஜைக்கு உகந்தது ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ: இரவில் பூத்து உதிரும் என்பதால் மக்கள் விடிய விடிய ரசித்தனர்

சீர்காழி: சீர்காழி மக்கள் மெய்சிலிர்க்க வைத்த ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ. சீர்காழி கடைவீதி சமுஇ உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஏராளமான மரங்கள், மலர்ச் செடிகள், மாடி தோட்டத்தில் காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேல் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரிலிருந்து பிரம்ம கமலம் என்ற அரியவகை செடியினை வாங்கி வந்து பள்ளி வளாகத்தில் வைத்து பராமரித்து வந்தார். இந்த செடி கடந்த 15 நாட்களுக்கு முன்பு 2 இலை வழியாக 2 மொட்டு வெளியே வந்து சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து நேற்று இரவு 8 மணியளவில் பூக்க தொடங்கி, சிறிது சிறிதாக பெரிதாகி இரவு 12 மணியளவில் முழுமையாக பூத்து குலுங்கியது. இதனை அறிந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பள்ளியில் குவிந்து பூக்களை கண்டு ரசித்தனர். பூக்கள் பூக்க தொடங்கிய நேரத்திலிருந்து பூக்களிலிருந்து ஒரு புதுமையான வாசனை வீசத்தொடங்கியது. இந்த வாசனை அனைவரும் மெய் மறக்க செய்தது.

பிரம்ம கமல பூக்கள்பூக்கும் போது அதனை பார்த்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பிரம்ம கமலம் செடி உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை அடிவாரத்தில் அதிகளவில் வளரக் கூடியது. இந்த செடி ஒரு வகை கள்ளி செடி வகையை சேர்ந்தது. இவ்வகை செடிகள் குளிர்ச்சியான பகுதிகளில் வளர்க்கூடியது. அரிய வகை மலர்களாலான பிரம்ம கமலம் பூக்கள் சிவபெருமானுக்கு உகந்தது என ஆன்றோர்கள் கூறுகின்றனனர். பிரம்ம கமலம் செடி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கத் தொடங்கி அன்று இரவு பூக்கள் முழுமையாக பூத்து குலுங்கும், இரவில் பூத்து இரவில் உதிர்ந்து விடும். பின்னர் ஒரு ஆண்டு கழித்து மீண்டும் பூக்கள் பூக்கத் தொடங்கும். சிவபெருமான் பூஜைக்கு உகந்த இந்த பூவின் விலை ரூ 1,200 வரை விலை போகும் என கூறப்படுகிறது. பள்ளி வளாகத்தில் பூத்திருந்த பிரம்ம கமலம் பூவை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து நினைத்தது நடக்க வேண்டும் என வேண்டி வணங்கி சென்றனர். சிலர் பூக்களுடன் செல்பி எடுத்து சென்றனர்.

Tags : Lord Shiva , Lord Shiva Puja, optimally, once, blooming, Brahma lotus flower
× RELATED சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாரியூர் கடலில் வலைவீசும் படலம் கோலாகலம்