முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள்: டெல்லி சக்தி ஸ்டாலில் உள்ள நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை

டெல்லி: இந்திரா காந்தி  நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல்காந்தி மரியாதை செலுத்தினார். நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. இவர் 1984 ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுவரையில் இந்தியாவில் பிரதமர் பதவி வகித்த ஒரே பெண்மணி இந்திரா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி அன்று தனது இல்லத்தில் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  

இவரது மறைவு இந்தியாவை மட்டுமின்றி பல உலக நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்திரா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லி சக்தி ஸ்டால் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி குடும்பத்தினர் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், இந்திரா காந்தியின் 37வது நினைவு தினமான இன்று ராகுல் காந்தி இன்று காலை நினைவிடத்திற்கு வந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: