×

`மழை பெய்தால் மாணவர்கள் அமர முடியாது’ மாமண்டூர் துவக்கப் பள்ளியை சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாமண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 1967ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால் திறக்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 5ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் மேற்கூரைகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த இந்த பள்ளி வரும் 1ம் தேதி முதல் திறக்கப்படுகிறது. ஆனால் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு வந்ததாலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், மழை பெய்தால் மாணவர்கள், வகுப்பறையில் அமரமுடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பள்ளியை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள்  கூறுகின்றனர். முன்னதாக இங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் பள்ளியை பார்வையிட்டார். அப்போது இந்த பள்ளியை சீரமைக்கவேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் அம்சா கோரிக்கை வைத்தார். இதையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று பள்ளியை சீரமைக்கவும் புதிதாக பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்வதாக எம்எல்ஏ உறுதியளித்தார்.


Tags : Mamandur Primary School , `If it rains, students, can not sit, school, align
× RELATED ஈரோட்டில் இன்று 110 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு