போந்தவாக்கம் கிராமத்தில் சமுதாய வளைகாப்பு: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

ஊத்துக்கோட்டை: போந்தவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்றார். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்  சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கான சமூதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில், திட்ட அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் வரவேற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு, பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மகாலட்சுமி மோதிலால், கச்சூர் வட்டார மருத்துவர் பாலமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு, 500 கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், புடவை ஆகியவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர், கர்ப்பிணிகளுக்கு 5 வகையான சாதம் வழங்கப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, அபிராமி குமரவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் நிர்வாகிகள் சுப்பிரமணி, சிவய்யா,  விஜயகுமார், பாபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: