திருவள்ளூர் கோட்டத்தில் சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

திருவள்ளூர்: சென்னை வட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கண்காணிப்பு பொறியாளர் செந்தில் திருவள்ளூர் கோட்டத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலை பணிகள், சாலைகளின் தரம், பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, திருவள்ளூரில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் திருவள்ளூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

இதில், கோட்ட பொறியாளர் ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளர்கள் தஸ்னவிஸ் பெர்னாண்டோ, ஆண்டி, முரளி, கார்த்திகேயன், திருஞானசம்பந்தம், பாலச்சந்தர், உதவி பொறியாளர்கள் ஜெயமூர்த்தி, ராஜ்கமல், கனகராஜ், சதீஷ்குமார், பாரதிதாசன், சந்திரசேகர், பிரபாகரன், அருள்ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

Related Stories:

More