×

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 400 பேர் தேர்ச்சி பெற்று சாதனை

சென்னை: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்( யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான பதவிகளுக்கான ேதர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான(2021ம் ஆண்டு). சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 712 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மார்ச் 4ம் தேதி அறிவித்தது. சுமார் 8 லட்சம் பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த 10ம் தேதி நடந்தது. அதன்படி சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இந்தியா முழுவதும் 73 நகரங்களில் நேற்று நடந்தது. தமிழகத்தில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர்.

இந்த நிலையில் முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் மத்திய அரசு பணிாளர் தேர்வாணையத்தின் இணைய தளமான www.upsc.gov.in, www.upsconline.nic.inல் வெளியிடப்பட்டுள்ளது. சங்கர் ஐ.ஏ.எஸ்.அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வில் இந்தியா முழுவதும் 9,214 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 400 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். எங்கள் அகடாமியில் சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம், டெல்லியில் பயின்ற 702 பேர் மாணவர்கள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்தக்கட்டமாக மெயின் தேர்வு ஜனவரி 7ம் தேதி தொடங்குகிறது.

மொத்தம் 5 நாட்கள் இந்த தேர்வு நடைபெறும். மெயின் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி வரும் வாரங்களில் ெதாடங்கும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தக்கட்டமாக நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.



Tags : IRS ,Tamil Nadu , IAS, IPS, IRS, Civil Service, First Examination, Pass
× RELATED டெல்லியில் இருந்து தலைமை தேர்தல்...