×

தர்பார், விஸ்வரூபம்-2 படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் கொரோனாவுக்கு பலி

மும்பை: தமிழில் ரஜினிகாந்தின் தர்பார், கமல்ஹாசனின் விஸ்வரூபம்-2 மற்றும் இந்தியில் கிரிஷ் 3, காக்கி, ஓ மை காட், தூம் 2, ரயீஸ், தபாங் 3, ராஸ் உள்பட பல படங்களில் நடித்தவர், யூசுப் உசைன் (வயது 73). கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இத்தகவலை யூசுப் உசைன் மருமகனும், பாலிவுட் இயக்குனருமான ஹன்சல் மேத்தா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘நிதி பற்றாக்குறை காரணமாக ஷாஹிட் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டேன். என் திரையுலக வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்டதாக கலங்கினேன். அப்போது யூசுப் உசைன் எனக்கு பண உதவி செய்தார். இப்படித்தான் ஷாஹிட் படம் வெளியானது. யூசுப் உசைன் எனக்கு மாமனார் இல்லை. நல்ல தந்தை. அவர் மறைந்துவிட்டார். நான் அனாதையாகி விட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். யூசுப் உசைன் மறைவுக்கு பாலிவுட் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags : Bollywood ,Korona , Darbar, Viswaroopam 2, actor, Bollywood actor, Corona
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...