அமெரிக்காவில் கொள்ளையனால் மருந்து நிறுவனத்தின் சிஇஓ சுட்டுக்கொலை: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூஜெர்சியின் பிளைன்ஸ்போரா பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கா (54). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், பிரபல மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த வந்தார். கடந்த செவ்வாயன்று அவர் பென்சில்வேனியாவில் உள்ள சூதாட்ட கிளப்பில் ரூ.7 லட்சத்தை வென்றதாக தெரிகிறது. இதை பார்த்த ஜேக்கப் ரைட் ஜான் என்ற கொள்ளையன், அவரை  பின்தொடர்ந்து வந்துள்ளான். 80 கிமீ  தூரம் அவரை அவன் காரில் பின்தொடர்ந்துள்ளான். அதிகாலை ஸ்ரீரங்கா வீடு வந்து சேர்ந்துள்ளார். அவரது மனைவியும், மகளும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த கொள்ளையன் ஸ்ரீரங்காவிடம் இருந்த பணத்தை கொள்ளையடிக்கும்போது அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பினான். இது பற்றி  விசாரித்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்ரைட் ஜானை கைது செய்தனர்.

Related Stories:

More