×

கண்டீரவா மைதானத்தில் கண்ணீர் கடல் புனித் உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி: முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் மாரடைப்பு, தற்கொலை செய்து 6 ரசிகர்கள் பலி

பெங்களூரு: பெங்களூருவில் மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடலுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இன்று காலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.  கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாருக்கு, நேற்று முன்தினம் காலை உடல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, தீவிர மாரடைப்பால் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருடைய உடல், மக்களின் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள கண்டீரவா உள் விளையாட்டு அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு லட்சக்கணக்கான ரசிகர்களும், பொதுமக்களும் விடிய விடிய நீண்ட வரிசையில் வந்து கண்ணீர் அஞ்சலி ெசலுத்தி வருகின்றனர். மாநிலத்தின் பல மாவட்டங்களில் இருந்து பஸ், ரயில், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது. புனித் உடலுக்கு மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய, மாநில அமைச்சர்கள், கர்நாடகா அரசியல் தலைவர்கள்,  கர்நாடக மாநில திமுக நிர்வாகிகள் மொ.பெரியசாமி, கே.தட்சணாமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் டி.சிவமலை உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலக நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர்,  தொழில்நுட்ப கலைஞர்கள் அஞ்சலி  செலுத்தினர். புனித் ராஜ்குமாரை உடலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. இதனால், நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு முதல்வர் பசவராஜ் பொம்ைம, மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, மாநகர போலீஸ கமிஷனர் கமல்பந்த் ஆகிேயார் அவரது உடல் மீது தேசியகொடி போர்த்தினர். புனித் ராஜ்குமாரின் உடல் இன்று காலை 6 மணிக்கு குடும்ப வழக்கத்தின்படி சடங்குகள் நடத்திய பின், அவருடைய தாய், தந்தையின் நினைவிடம் அமைத்துள்ள கண்டீரவா ஸ்டுடியோவுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் 7 கி.மீ ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

அங்கு காலை 10.30 மணிக்குள் புனித்தின் உடல் அரசு முழு மரியாதையுடன், குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்படுகிறது. புனித்துக்கு ஆண் வாரிசு இல்லாததால், அவருடைய அண்ணன் ராகவேந்திர ராஜ்குமாரின் மகன் வினய் ராஜ்குமார் இறுதி சடங்குகள் செய்கிறார். புனித்தின் திடீர் மறைவை தாங்கி கொள்ள முடியாமல், மாரடைப்பாலும், தற்கொலை செய்தும் கர்நாடகாவை சேர்ந்த அவருடைய ரசிகர்கள் 6 பேர் இறந்துள்ளனர். மேலும், 4 பேர் விஷம் குடித்தும், பிளேடால் உடலை கிழித்தும், சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டும் தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கதறி அழுத மகள்
அமெரிக்காவில் படித்து  வரும் புனித்தின் மகள் த்ரித்தி, விமானம் மூலம் நேற்று பகல் 1.30  மணிக்கு டெல்லி வந்தார். அங்கிருந்து, விமானம் மூலம்  பெங்களூருக்கு மாலை 5 மணிக்கு  வந்தார். அங்கிருந்து கார் மூலமாக கண்டீரவா உள்விளையாட்டு அரங்கத்திற்கு அழைத்து  வரப்பட்டார். அங்கு தாய் அஷ்வினி, பெரியப்பாக்கள் சிவராஜ் குமார்,  ராகவேந்திர ராஜ்குமார் உள்பட குடும்பத்தினரை கட்டி தழுவி துக்கத்தை  வெளிப்படுத்தினர். தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத த்ரித்தி, தந்தையின் தலையை வருடி அவரை எழுப்பியது காண்போரை  கண்கலங்க செய்தது.

இறுதி சடங்கை மாற்றிய முதல்வர்
புனித் ராஜ்குமாரின் உடல் ஞாயிற்றுகிழமை அடக்கம் செய்வதாக குடும்பத்தினர் சார்பில் முதலில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்த புனித்தின் மகள் நேற்று மாலைக்குள் பெங்களூரு வருவது உறுதியானதால், நேற்று மாலை 5.30 மணிக்கு நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், பகல் 2.30 மணிக்கு கண்டீரவா விளையாட்டு அரங்கம் வந்த முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘மாலையில் ஊர்வலம் நடத்தினால், சமாதி செல்ல இரவாகிவிடும். இது பல பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆகவே நாளை (இன்று) நல்லடக்கம் செய்யலாம்,’ என்று புனித் குடும்பத்தினரிடம் யோசனை தெரிவித்தார். அதை அவர்கள் ஏற்றதால், ஞாயிற்றுகிழமை நல்லடக்கம் செய்யும் தகவலை முதல்வர் பொம்மை அறிவித்தார்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்
புனித் மரணத்தால்  பெங்களூருவில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டது. ரசிகர்கள் தற்கொலை செய்தனர். இதனால், புனித்தின் அண்ணன்களான சிவராஜ் குமார், ராகவேந்திர ராஜ்குமார் கூறுகையில், ‘எனது சகோதரரின் உடல் அடக்கம் செய்யும் வரை யாரும் எந்தவிதமான அசம்பாவித சம்பவத்திலும் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும். கடைகளை  அடைப்பது, வாகனங்கள் நிறுத்துவது ேபான்ற செயலில் ஈடுபட கூடாது. தற்ெகாலை முயற்சியில் ஈடுபடாமல் மனதை தேற்ற வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்தனர்.


Tags : Kandirava , Kandirava Maidan, Sacred Body, Tribute, Full Government Respect,
× RELATED பெங்களூரு கண்டீரவா மைதானத்தில்...