டிரான்சில்வேனியா ஓபன்: எம்மாவை வீழ்த்தினார் மார்தா

க்ளூஜ் நபோகா: ருமேனியாவில் நடைபெறும் டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட மார்தா கோஸ்ட்யுக் தகுதி பெற்றார். காலிறுதியில் யுஎஸ் ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானுவுடன் (18 வயது, இங்கிலாந்து) மோதிய மார்தா கோஸ்ட்யுக் (19 வயது, உக்ரைன்) அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 57 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. உலக தரவரிசையில் எம்மா 23வது இடத்திலும், மார்தா 55வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: