×

முல்லை பெரியாரில் மேலும் 4 மதகு திறப்பு: வினாடிக்கு 2975 கன அடி வெளியேற்றம்

திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் நீர்மட்டம்  தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மேலும் 4 மதகுகள் திறக்கப்பட்டன. இதன்  மூலம், அணையில் இருந்து  வினாடிக்கு 2975 கன அடி  தண்ணீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் கனமழையை தொடர்ந்து முல்லை பெரியாறுஅணை  நீர்மட்டம் 138 அடியை தாண்டியது. தொடர்ந்து நேற்று முன்தினம் காலை அணை  திறக்கப்பட்டது. காலை 2 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.  வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணை திறக்கப்பட்ட  போதிலும் மழை காரணமாக நீர்மட்டம் மேலும் உயர்ந்தது.

அன்று இரவு  நீர்மட்டம் 138.85 அடியாக உயர்ந்தது. இதையடுத்து மேலும் ஒரு மதகு இரவு  திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர்மட்டம்  தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மேலும் 4 மதகுகள் திறக்கப்பட்டன. நேற்று  மாலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 138.95 ஆக இருந்தது. அணைக்கு நீர்வரத்து  வினாடிக்கு 5314 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2975 கன அடி  தண்ணீர் 6 மதகுகள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதை வழியாக  தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 2340 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு  வருகிறது.

இங்கிருந்து வெளியேறும் தண்ணீர்  இடுக்கி அணைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் இடுக்கி அணையும்  திறக்கப்படலாம் என தகவல் பரவியது. ஆனால் இடுக்கி நீர்மட்டம் உயராததால் அணை  தற்போது திறக்கப்பட மாட்டாது என்று கேரள மின்வாரியம் அறிவித்துள்ளது.  இதையடுத்து இடுக்கி அணைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டு,  ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Mulla Periyar , mullaiperiyaaru, shutter , cubic feet
× RELATED முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து...