×

பொன்னை கொள்முதல் நிலையத்தில் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்

பொன்னை: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை அருகே கீரைசாத்து பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் சுமார் 5000 மூட்டைகளை கொள்முதல் செய்தது. இதுதவிர, விவசாயிகள் கொண்டு வந்த 1000 மூட்டைகளை வாங்கி வெளியில் வைத்து விட்டனர். இதற்கு பணம் தராமல் புறக்கணித்ததாக தெரிகிறது. இதுமட்டுமின்றி கூடுதலாக 800 கொள்முதல் செய்து அரசு பைகளில் வைத்தனர். இதற்கும் பணம் தரவில்லை. இதுேபான்று, கடந்த 3 மாதங்களாக நெல் மூட்டைகள் மழையிலும் வெயிலிலும் நனைந்து மீண்டும் முளைத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் அனைத்தும் வீணாகிவிடும் நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக விவசாயிகளிடம் வாங்கிவைத்த நெல் மூட்டைகளை ெகாள்முதல் செய்யவேண்டும், கொள்முதல் செய்த 800 மூட்ைடகளுக்கு பணம் தரவேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bonn Purchasing Centre , 1000 bundles of paddy soaked in rain at Ponnai shopping center
× RELATED காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி...