×

பாஜக தலைவர் அண்ணாமலை நாளை குமரி வருகை

சுவாமியார்மடம்: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை குமரிமாவட்ட வருகிறார். அண்ணாமலை மாநில தலைவராக பதவியேற்ற பின் முதல் முறையாக தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு கன்னியாகுமரி மாவட்டம் வருவதால் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு சுவாமியார்மடம் வசந்த மாளிகை ஆடிட்டோரியத்தில் வைத்து செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

மாவட்டத்தில் பாஜக கட்சியின் முக்கிய கோரிக்கையான இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கோரிக்கை சம்பந்தமாக அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என பாஜக தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மற்ற கட்சிகளை சார்ந்த சிலர் பாஜகவில் இணைக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags : Kumari ,Bhājaka ,President ,Annalayam , BJP leader Annamalai to visit Kumari tomorrow
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...