×

வடகிழக்கு பருவமழை தீவிரம்: ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி 4 ஆயிரம் கனஅடி கடலுக்கு செல்கிறது

ஸ்ரீவைகுண்டம்: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.  பாபநாசம் அணையின் நீர்மட்டம் 135.10 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 1404.75 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவை தவிர கடனா, ராமநதி, கருப்பாநதி குண்டாறு, அடவி நயினார் ஆகிய அணைகளின் தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து பாபநாசம் அணையின் கடைசி அணைக்கட்டான ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் கடலுக்கு செல்கிறது. மேலும் அணையின் 18 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றிலிருந்து வடகாலில் மட்டும் 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மருதூர் கீழக்கால், மேலக்கால், சடையநநேரி, தென்கால் ஆகிய கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. சமீபகாலமாக ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டிலிருந்து 18 மதகுகளும் திறக்கப்பட்டது, இதுவே முதன்முறையாகும். அண்மையில் தான் அனைத்து மதகுகளையும் பொதுப்பணித்துறையினர் பழுதுபார்த்திருந்தனர். வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் வரை இருப்பதால் பல லட்சம் கனஅடி நீர் கடலுக்கு சென்று வீணாகும் நிலை ஏற்படும். எனவே தற்போது 8 அடி கொள்ளளவு கொண்ட ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைக்கட்டு 4 அடியே ஆழம் உள்ளது. எனவே அணைக்கட்டை தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Srivaikuntam dam , Northeast monsoon intensifies: 4,000 cubic feet of sea beyond Srivaikuntam dam
× RELATED கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை...