×

முல்லை பெரியாறு அணை விவகாரம்; இருமாநில அரசுகளும் நல்லுறவை வலுப்படுத்த வேண்டியது கடமை: வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: 2014ம் ஆண்டு முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்தி கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள முதல்வர் பினராய் விஜயன், 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரை திறந்துவிட்டார். 3 ஆண்டுகளாக தமிழக படகு பயன்படுத்த கேரள அரசு அனுமதிக்கவில்லை. 20 ஆண்டு காலமாக முல்லை பெரியாரில் மின்சாரத்தை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.

யானை, கரடி, புலி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகள் வரும் இடத்தில் அமைந்துள்ள தமிழக அலுவலக அணைக்கட்டில் குடியிருப்பவர்கள் உயிரை கையில் பிடித்து கொண்டிருக்கிறார்கள். அங்கு மும்முனை மின்சாரம் தரப்பட வேண்டும். வல்லக்கடவு பாதையை சரிசெய்து தர வேண்டும். பேபி அணையை வலுப்படுத்த இடையூறு செய்ய கூடாது. முல்லை பெரியாறு அணையில் உள்ள தண்ணீரின் ஒவ்வொரு சொட்டும் தென் தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நீராகும்.

ஆகவே 142 அடிக்கு மேல் வரும் தண்ணீர் கேரளாவில் உள்ள இடுக்கி அணைக்குத்தான் செல்லும். 555 அடி உயரம் உள்ள இடுக்கி அணையின் நீர் மட்டத்தை மழை காலங்களில் இடுக்கி மாவட்டத்தில் அபாய எச்சரிக்கை விடப்பட்டவுடன், இடுக்கி அணை நீர்மட்டத்தை 455 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் தவறான பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர். இரு மாநில அரசுகளும் நேச உறவை வளர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக மக்கள் செய்துதர தயாராக உள்ளனர். இரு மாநில அரசுகளும் நல்லுறவை வலுப்பத்த வேண்டியது இன்றைய முன்னணி கடமையாகும்.

Tags : Mullaperiyar Dam ,Waikoloa , Mullaperiyar Dam issue; It is the duty of the two states to strengthen good relations: Waikoloa report
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...