×

தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக 34,259 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக 34,259 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சொந்த ஊர்களுக்கு சென்றிட 16,540 பேருந்துகளும், திரும்பி வர 17,719 பேருந்துகளும் ய்யப்பட உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மொத்தம் 16,540 பேருந்துகள் இயக்கப்படும். நவம்பர் 5 முதல் 8ம் தேதி வரை மொத்தம் 17,719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.


Tags : Deepavali ,Minister ,Rajakannappan , Deepavali, Special Bus, Minister Rajakannappan
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி