இலங்கை- தெ.ஆப்ரிக்கா, இங்கி-ஆஸி. இன்று மோதல்

சார்ஜா: உலக கோப்பை டி.20 தொடரில் இன்று 2 போட்டிகள் நடக்கிறது. குரூப் 1 பிரிவில் மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் இலங்கை-தென்ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இலங்கை முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. தென்ஆப்ரிக்கா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்த நிலையில் 2வது போட்டியில் வெஸ்ட்இண்டீசை வென்றது. இன்று 2வது வெற்றி முனைப்பில் களம் காண்கின்றன. இரு அணிகளும் இதுவரை 16 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. அதில் தென்ஆப்ரிக்கா 6, இலங்கை 11ல் வென்றுள்ளன. உலக கோப்பையில் 3 போட்டிகளில் ஆடியதில் தெ.ஆ 2-1 என முன்னிலை வகிக்கிறது.

இரவு 7.30 மணிக்கு துபாயில் வலுவான இங்கிலாந்து-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணி வெஸ்ட்இண்டீஸ், வங்கதேசம், ஆஸ்திரேலிய அணி தென்ஆப்ரிக்கா, இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளன. இன்று ஹாட்ரிக் வெற்றியுடன் பட்டியலில் முதலிடம் யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி.20ல் இதற்கு முன் 19 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்ததில் ஆஸி.10, இங்கி. 8ல் வெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. உலக கோப்பையில் 2 போட்டிகளில் மோதியதில் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.

Related Stories:

More