கும்பகோணம் அருகே கூரை வீடு தீப்பற்றி எரிந்து சேதம்

கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் சரகம் கீரனூர் மணவெளி தெருவை சேர்ந்தவர் சங்கர் (55). இவரின் கூரை வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருக்கும் போது 11 மணிக்கு திடீரென வீட்டின் கூரைப் பகுதி தீ பற்றி எரிந்தது. இதை அறிந்த சங்கர் வீட்டிற்கு வெளியே வந்து தீயை அணைக்க முயற்சித்த போது வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.

உடனே அருகிலிருந்தவர்கள் குடவாசல் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தபின் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் கருகி சேதமானது. மேலும் அவருடைய ஒரு மாட்டுக்கு லேசான காயமும், 5க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தது.

Related Stories: