×

தீபாவளி பண்டிகை: தென் மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

நெல்லை: பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க சில சிறப்பு ரயில்களில் நவம்பர் மாத முதல் வாரத்தில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது. தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் (வண்டி எண் 02694) சிறப்பு ரயிலில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 7 வரையும், மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் (வண்டி எண் 02693) சிறப்பு ரயிலில் நவம்பர் 2 முதல் நவம்பர் 10 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலில் (வண்டி எண் 02633) அக்டோபர் 31 முதல் நவம்பர் 8 வரையும், மறுமார்க்கத்தில் வண்டி எண் 02634 கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலில் நவம்பர் 1 முதல் நவம்பர் 9 வரையும் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது.

Tags : Deepavali Festival ,South District , train
× RELATED குழந்தைக்கு தங்க மோதிரம், நல உதவிகள்...