×

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை ஒட்டி அவரது சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். முதல்வருடன் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தேவர் நினைவிடம் அருகேயுள்ள தேவர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் பார்வையிட்டார்.


Tags : Muthuramilanga ,BC ,Stalin , Golden Muthuramalinga Thevar, Memorial, MK Stalin
× RELATED போக நந்தீஸ்வரர் ஆலயம்