×

தமிழக- ஆந்திரா எல்லையிலான காட்பாடியில் வசூல் வேட்டை தீவிரம் டிரைவர்களிடம் லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்: ஆர்டிஓ அலுவலக புரோக்கர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்

வேலூர், அக்.30: தமிழக- ஆந்திரா எல்லையான காட்பாடியில் டிரைவர்களிடம் ஆர்டிஓ செக்போஸ்ட் புரோக்கர், எஸ்எஸ்ஐ போட்டி போட்டு லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து எஸ்எஸ்ஐயை சஸ்பெண்ட் செய்து எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக- ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டையில் வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடி மற்றும் காவல் துறை சோதனைச்சாவடி அமைந்துள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் மாலை இவ்வழியாக தெலங்கானாவுக்கு சேலத்தை சேர்ந்த 5 நெல் அறுக்கும் இயந்திரங்களை ஓட்டுனர்கள் ஓட்டி சென்றுள்ளனர். அப்போது காட்பாடியில் வட்டார போக்குவரத்து செக்போஸ்ட் அலுவலகத்தில் ஒரு வண்டிக்கு ₹500 ரூபாயும், காவல் துறை சோதனைச்சாவடியில் ஒரு வண்டிக்கு ₹300 ரூபாயும் லஞ்சம் வசூலிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் செக்போஸ்ட் அலுவலகத்தில் புரோக்கராக வேலை செய்யும் சேகர் என்பவர் நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுனர்களிடம் 5 பேரிடம் தலா ₹500 லஞ்சம் பெறுகிறார். அடுத்து சிறிது தொலைவில் உள்ள காவல் துறையை சேர்ந்த செக்போஸ்டை தாண்டி இந்த வாகனங்கள் சென்றதை பார்த்ததும் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் மொபட்டில் விரட்டிச்சென்று அந்த 5 வாகனங்களை சிறிது தூரத்தில் தடுத்து நிறுத்தினார். பின்னர் டிரைவர்களிடம் ₹300 லஞ்சமாக கேட்டுள்ளார். டிரைவர்கள் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். அதனால் ஆத்திரமடைந்த எஸ்எஸ்ஐ. ஆர்டிஓ செக்போஸ்ட்டில் மட்டும் ₹500 கொடுத்துவிட்டு போகிறீர்கள். எங்களுக்கும் கொடுங்கள் என்று வாக்குவாதம் செய்கிறார். இந்த வீடியோ குறித்த புகார் வேலூர் எஸ்பி செல்வகுமாருக்கு சென்றது. இதையடுத்து லஞ்சம் பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷை சஸ்பெண்ட் செய்து எஸ்பி செல்வகுமார் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.



Tags : SSI ,Katpadi ,Tamil Nadu ,Andhra border , Intensification of poaching in Katpadi on the Tamil Nadu-Andhra border SSI Action Suspended for Bribery of Drivers: RTO Office Broker Bribery video goes viral
× RELATED எஸ்எஸ்ஐயை தாக்க முயன்ற ரவுடி கைது