புதுவையில் நவ. 2, 3ம்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: தீபத் திருநாளாம் தீபாவளி இந்தாண்டு நவம்பர் 4ம்தேதி  கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை  விடப்பட்டுள்ளன. 31ம்தேதி ஞாயிறு, 1ம்தேதி புதுச்சேரி விடுதலை நாள் ஏற்கனவே  அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நவ. 2ம்தேதி  இறந்த ஆன்மாக்களின் நினைவுநாள், 3ம்தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் என்ற  அடிப்படையில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்  கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

தீபாவளிக்கு  மறுநாள் வெள்ளிக்கிழமை, வரும் நிலையில், அன்று பள்ளிகள் இயங்கும் என்று  தெரிகிறது.  புதுவையில் கொரோனா 2ம் அலைக்காக மூடப்பட்ட ஆரம்ப,  நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 8ம்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட  உள்ளன. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே  வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: