தீபாவளியையொட்டி ரேஷன் கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் கூட்டுறவு துறையால் நடத்தப்படும் நியாயவிலை கடைகள் அனைத்தும் நவம்பர் 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக பொருட்களை வாங்க இயலாதவர்கள் வழக்கம்போல் பண்டிகை முடிந்த பிறகு நவம்பர் 7ம் தேதி முதல் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories: