பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை; டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஆஜராகாத பட்சத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும்; நீதிபதி எச்சரிக்கை

விழுப்புரம்: டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி கோபிநாத் எச்சரித்துள்ளார். ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாத பட்சத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாலியல் தொந்தரவு தொடர்பாக வழக்கு நவ. 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பாதுகாப்பிற்கு சென்ற பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகிய இருவர் மீது விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஆஜராகவில்லை எஸ்.பி. கண்ணன் மட்டும் ஆஜராகிருந்தார் இந்நிலையில் ராஜேஷ் தாஸ் தரப்பு 15 நாள் கால அவகாசம் கேட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.இந்த மனுவை நீதிபதி கோபிநாத் தள்ளுபடி செய்து வழக்கு விசாரணை வரும் நவ.1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.மேலும் நவ. 1-ம் தேதி ராஜேஷ் தாஸ் ஆஜராக வேண்டுமென்ற கண்டிப்பையும் விடுத்துள்ளார். ராஜேஷ் தாஸ் ஆஜராகாத பட்சத்தில் அவருக்கு பிடி ஆணை வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: