கோத்தகிரி பகுதிகளில் சாரல் மழை, கடும் குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோத்தகிரி :  தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, ஒரசோலை, கீழ் கோத்தகிரி, சோலூர்மட்டம், கோடநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு சாரல் மழை, கடும் குளிர் நிலவியது. இதனால் தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு சென்று வருவோர் கடும் அவதியடைந்தனர்.

Related Stories:

More