பொன்னமராவதி பகுதி பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு முகாம்

பொன்னமராவதி : பொன்னமராவதியில் உள்ள பள்ளிகளில் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பொன்னமராவதியில் உள்ள வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் எவ்வாறு பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.மேலும் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் மற்றும் பொன் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை நிர்மலா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More