தீபாவளி நெருங்குவதால் சந்தையில் பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பு-கூடுதல் விலைக்கு ஏலம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வார சந்தையில் நேற்று, பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் கூடுதல் விலைக்கு விற்பனையானது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டின் ஒருபகுதியில், வியாழக்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கிறது. அப்போது  ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் உடுமலை, கனியூர், மடத்துக்குளம், பழனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படும், பந்தய சேவல்(கட்டுச்சேவல்) விற்பனையும் நடக்கிறது.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால், நேற்று நடந்த ஏலநாளில் சுற்றுவட்டார கிராமங்களிலில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர், பந்தய சேவலை விற்பதற்காக அதிகளவில் கொண்டு வந்திருந்தனர். பந்தய சேவலை வாங்க அதிகாலை முதலே சந்தையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

சந்தைக்கு கொண்டுவரப்பட்ட பந்தய சேவலை, சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்தும். பழனி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்தும் வந்த பலர் குறிப்பிட்ட  விலை நிர்ணயம் செய்து வாங்கி சென்றனர்.இதனால் எப்போதும் இல்லாத அளவிற்கு, நேற்று பந்தய சேவல் விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. பந்தய சேவல் ஒன்று ரூ.1500 முதல் ரூ.5ஆயிரம்  வரை என தரத்திற்கேற்ப விலைபோனது.

Related Stories: