×

குஜிலியம்பாறையில் அச்சுறுத்தும் அரசு கட்டிடம்-இடித்து அப்புறப்படுத்த கோரிக்கை

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை பகவதியம்மன் கோயில் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து அரசு குடோன் கட்டிடம் கட்டப்பட்டது. இதில் ஒரு கட்டிட அறை நூலகத்திற்கு பயன்பாட்டில் இருந்து வந்தது. போதிய பராமரிப்பு இன்றி இருந்ததால், நாளடைவில் கட்டிடங்கள் விரிசல் விட தொடங்கியது. பின்னர் அங்கிருந்த கிளை நூலகம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

தொடர்ந்து குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய நிர்வாக பயன்பாட்டில் இருந்து வந்தது. பின்னர் கட்டிடங்கள் இடிந்தவாறும் பழுந்தடைந்த நிலையில் காணப்பட்டதால் அலுவலக பயன்பாட்டை தவிர்த்தனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லாமல் இக்கட்டிடம் இருந்து வருகிறது. கட்டிடத்திற்கு உள்ளே முட்புதர்கள் மண்டியும், பெரிய அளவில் மரங்கள் வளர்ந்து நிற்கிறது. இக்கட்டிடம் எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

குஜிலியம்பாறையல் அவ்வப்போது பெய்யும் தொடர்மழையினால் கட்டிடம் மேலும் வலுவிழந்து உள்ளதால், இரவு நேரத்தில் இக்கட்டிடம் இடிந்து விழுந்தால் அசம்பாவித சம்பவம் ஏதும் நடந்து விடுமோ என செய்வறியாமல் ஒருவித அச்சத்துடன் இங்குள்ள குடியிருப்பு வாசிகள் இருந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த இக்கட்டிடத்தை முற்றிலும் இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kujilyampara , Kujiliampara: There are a number of residences on the Bhagavathyamman Temple Road in Kujiliampara. Here for the last 40 years
× RELATED கொரோனா பாதித்த நபர் மூன்றே நாளில்...