சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘பேஸ்புக்’கின் பெயர் “மெட்டா” என பெயர் மாற்றம்: மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் !

கலிபோர்னியா: சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘பேஸ்புக்’கின் பெயர் “மெட்டா” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்களில் மிக முக்கியமானது பேஸ்புக். இந்நிறுவனம் அதன் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருகிறது. நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘பேஸ்புக்’கின் பெயர் “மெட்டா” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நிலவி வரும் சமூக பிரச்னைகளுடன் போராடி கற்றுக் கொண்டதை கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்கி வருகிறோம். அதே நேரத்தில் தங்களுடைய மேலான சேவையும், வாடிக்கையாளர் மீதான அக்கறையும், ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுகளும் மாறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: