×

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் இன்க், மெட்டா (Meta) என பெயர் மாற்றம்: மார்க் சக்கர்பெர்க் அறிவிப்பு

கலிஃபோர்னியா: ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் இன்க் (Facebook Inc.,) என்ற பெயரை மெட்டா (Meta) என மாற்றியுள்ளது. ஃபேஸ்புக்கின் வருடந்திர கனெக்ட் நிகழ்வு நேற்று நடந்து முடிந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே நேற்றைய கனெக்ட் நிகழ்வில் ஃபேஸ்புக் இன்க் என்ற பெயருக்கு மாற்றாக மெட்டா (Meta) என்ற புதிய பெயரை அறிவித்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க்.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ஆக்குலஸ் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் இனி மெட்டா (Meta) என அழைக்கப்படும். ஃபேஸ்புக் சமூக வலைதள சேவை அதே பெயருடனே தொடரும். இந்தப் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து அவர் பேசும் போதும், தற்போது ஈடுபட்டிருக்கும் செயல்பாடுகளையோ திட்டங்களையோ பிரதிபலிப்பதாக ஃபேஸ்புக் என்ற பெயர் இல்லை, அது சமூக வலைதளத்தை குறிப்பதாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால், இனி வரும் காலங்களில் அப்படி இருக்காது, ஃபேஸ்புக் என்ற ஒரு சமூக வலைத்தள நிறுவனமாக இல்லாமல் மெட்டா என்ற மெட்டாவெர்ஸை மையப்படுத்தி இயங்கும் ஒரு நிறுவனமாக அறியப்படும் என்று அவர் பேசியுள்ளார்.

Tags : Facebook Inc. ,Facebook ,Mark Zuckerberg , facebook, meta
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...