விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகை

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாட வலியுறுத்தி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் சார்பில் விழிப்புணர்வு ஒத்திகைகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் உள்ள பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடிட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் மாணவ மாணவிகள், குழந்தைகள் பட்டாசுகளை பாதுகாப்பாக விபத்து இல்லாமல் எவ்வாறு வெடிப்பது என்றும், பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்வது என செய்முறை விளக்கம் செய்து காண்பித்தனர் விபத்தில்லாமல் பட்டாசு வெடித்து தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்கள்.

Related Stories:

More