அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி வார்டுக்கு 2 வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 இடங்களிலும் 7 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படுகிறது. கொரோனா ஊரடங்கின் போதும் ஏழை மக்களின் பசிப் பிணியை போக்கியது அம்மா உணவகம். தற்போது தமிழக அரசு நிதி நிலையை சுட்டிக்காட்டி, உணவு பொருட்களை குறைத்து வழங்குவதால், குறைந்த அளவிலேயே உணவு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறுகின்றனர். மேலும் அம்மா உணவகங்களில் சுழற்சி அடிப்படையில் வேலை, பணியாளர்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்த்து தமிழக அரசு, அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: