×

இல்லம் தேடி கல்வி திட்டம் பெற்றோருக்கு சூர்யா வேண்டுகோள்

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கான விழிப்புணர்வு வீடியோவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார். கடந்த 2 வருடமாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுகின்றன. அதே சமயம், இந்த இடைவெளியில் பல பெற்றோர் தங்களது பிள்ளைகளை பள்ளியிலிருந்து நீக்கிவிட்ட அதிர்ச்சி தகவல்களும் வெளியாகிறது. இதையடுத்து துவங்கப்பட்ட திட்டம்தான் ‘இல்லம் தேடிக் கல்வி’. இந்த திட்டம் மூலம் ஆசிரியர்கள் வீடு தேடி சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க உள்ளனர்.

இந்த திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவங்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து விழிப்புணர்வு வீடியோ ஒன்றை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: இனிது, இனிது கற்றல் இனிது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நம்ம மாணவர்களோட கற்றல் இடைவெளியை குறைக்க ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. நம்ம மாணவ, மாணவிகளுடைய கற்றல் ஆர்வத்தை தூண்டும் விதமாக விளையாட்டு முறையில் எழுதவும், படிக்கவும், கல்வி ஆர்வலர்கள் சொல்லி தரப்போகிறார்கள்.உரிய பாதுகாப்பு வழிமுறையோடு இல்லம் தேடிக்கல்வி என்ற திட்டத்தில் அனைத்து குழந்தைகளும் பயன்பெற பெற்றோரும், ஊர்மக்களும் ஊக்குவிப்போம். உறுதி செய்வோம். நம்ம குழந்தைகளோட கல்வி மீது ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய நேரம் இது என்று அந்த விழிப்புணர்வு வீடியோவில் சூர்யா பேசியுள்ளார்.

Tags : Surya , Surya appeals to parents to find a home education program
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்