காலிறுதியில் எம்மா ரடுகானு

ருமேனியாவில் நடைபெறும் டிரேன்சில்வேனியா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, யுஎஸ் ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு (இங்கிலாந்து) தகுதி பெற்றார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ருமேனியாவின் அனா போக்தனுடன் (28 வயது) நேற்று மோதிய ரடுகானு (18 வயது) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். காலிறுதியில் உக்ரைனின் மார்தா கோஸ்ட்யுக்குடன் (19 வயது) ரடுகானு மோதுகிறார்.

Related Stories: