×

3 பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் பங்கு ஈவுத்தொகை ரூ.155.26 கோடிக்கான காசோலை முதல்வரிடம் வழங்கப்பட்டது

சென்னை: பொதுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பங்கு ஈவுத் தொகையாக ₹155 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 718க்கான காசோலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசுக்கு 2020-21ம் ஆண்டிற்கான பங்கு ஈவுத் தொகையாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) சார்பில் ₹77 கோடியே 93 லட்சத்து 33 ஆயிரத்து 18க்கான காசோலையும், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) சார்பில் இடைக்கால ஈவுத் தொகையாக ₹70 கோடிக்கான காசோலையும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சார்பில் 7 கோடியே 33 லட்சத்து 34 ஆயிரத்து 700 ரூபாய்க்கான வங்கி வரைவோலை என மொத்தம் 155 கோடியே 26 லட்சத்து 67 ஆயிரத்து 718 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

நிகழ்வின்போது, தொழில் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) நா.முருகானந்தம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆனந்த், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister , 3 Public Sector, on behalf of, share dividend, Rs.155.26 crore, check
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...