×

வங்கதேசத்தை வீழ்த்தி 2வது வெற்றி: ஜேசன்ராய் பேட்டிங் மிகவும் கம்பீரமானது: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் பேட்டி

அபுதாபி:  டி.20 உலக கோப்பை தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த டி20 லீக் போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்கதேசம்-இங்கிலாந்து அணிக்ள மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து 14.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 38 பந்தில் 61 ரன் எடுத்த இங்கிலாந்தின் ஜேசன் ராய் ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல் போட்டியில், வெஸ்ட்இண்டீசை வீழ்த்திய இங்கிலாந்துக்கு இது 2வது வெற்றியாகும்.

வெற்றிக்கு பின் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியதாவது: பந்துவீச்சாளர்கள் போட்டியை சிறப்பாகத் தொடங்கினர், பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. ஒயிட்பால் கிரிக்கெட்டிற்கு இது மிகவும் முக்கியம். 2019 உலக கோப்பை வெற்றியில் நிறைய வீரர்கள் பங்கு வகித்தனர். அது டி.20 கிரிக்கெட்டிற்கும் கைகொடுத்தது. ஜேசன்ராய் விளையாடும் விதம் மிகவும் கம்பீரமானது, என்றார்.

வங்கதேச கேப்டன் மஹ்முதுல்லா கூறுகையில், பேட்டிங்கில் நாங்கள் நன்றாகத் தொடங்கவில்லை, எந்த பார்ட்னர் ஷிப்பும் கிடைக்கவில்லை. நல்ல தொடக்கம் கிடைத்தால் பலன் கிடைக்கும். இல்லையென்றால் இதுபோன்ற விக்கெட்டில் வெற்றி கடினமாகிவிடும். எங்களிடம் பவர்-ஹிட்டர்களை விட திறமையான ஹிட்டர்கள் உள்ளனர். பேட்டிங்கில் சில விஷயங்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று நினைக்கிறேன், என்றார்.


Tags : Bangladesh ,Jason Roy ,England ,Morgan , Bangladesh, England Captain Morgan, Interview
× RELATED சில்லி பாயின்ட்…