×

கோவையில் கார் உதிரிபாக விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து

கோவை: கோவையில் கார் உதிரிபாக நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாக விற்பனை குடோன் இங்கு உள்ளது. இந்த குடோனானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்கு திறந்துள்ளனர். இந்த குடோனின் ஒரு பகுதியில் சரியாக 1 மணி நேரத்திற்கு முன்னதாக தீ பற்றி இருப்பதாக தெரிகிறது. தற்போது அந்த குடோனில் ஒரு பகுதி முழுவதுமாக தீக்கிரையாகி இருக்கிறது. தற்போது 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இருப்பினும் இங்கு கார்களுக்கு பயன்படுத்த கூடிய ஆயில், பெயிண்ட்ஸ் இருப்பதால் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து துர்நாற்றம் வீசக்கூடிய ஒரு சூழல் உள்ளது.

இருப்பினும் தற்போது தீயணைப்பு துறையினர் சோப்பு நுரை கலந்த நீரை பாய்ச்சி அடித்து தாயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ பரவிய உடனே உள்ளே பணியில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியே வந்தனர். தற்சமயம் வரை பல லட்சம் ரூபாய் வரை மதிப்பிலான உதிரி பாகங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்த கார் உதிரிபாக குடோனில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் உதிரிபாகம் அனுப்பப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் நேரடியாக இங்கு வந்தும் உதிரிபாகங்களை வாங்கி கொண்டு சென்றனர். வாடிக்கையாளர்கள் இன்று காலை இருந்து போது தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை வருவதை பார்த்த குடோன் உரிமையாளர் உடனே பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை குடோனை விட்டு வெளியே அனுப்பிவிட்டனர். அதன் பின்னர் தான் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Coime , Fire accident
× RELATED பூனை காணவில்லை; கண்டுபிடித்து...