முத்துப்பேட்டையில் கடைக்குள் புகுந்த 6அடி சாரைப்பாம்பு: தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை ஆசாத்நகர; அருகில் உள்ள சுங்க இலக்கா அலுவலகம் எதிரே மதன் என்பவர் பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வருகிறார்.நேற்று கடையில் தீபாவளி வியாபாரம் மும்முரமாக நடந்து வந்தநிலையில் கடைக்கு பின்புறம் சந்து வழியாக கடை வாசலுக்கு கடந்து வந்த சுமார் 6அடி சாரைப்பாம்பு ஒன்று சாலையில் உள்ள கூட்டத்தை பார்த்து இவரது கடைக்குள் புகுந்தது.

அப்பொழுது கடையில் பொருள் வாங்க வந்த வாடிக்கையாளர; ஒருவரின் காலில் ஏறி சென்ற பாம்பு கடையின் பொருட்களுக்குள் புகுந்துக்கொண்டது. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உட்பட கடையில் உள்ளவர்கள் அனைவரும் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.

இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்குவந்த நிலைய அலுவலர் மனோகரன், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் நீண்டநேரம் போராடி பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு கவ்வி உயிருடன் பிடித்து காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More