ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

ஸ்ரீநகர்: ஜம்மு- காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள செர்தாரி பகுதியில் ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதி திடீரென ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார். இதனையடுத்து, ராணுவ வீரர்களால் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும், இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் கூறுகையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள செர்தாரி பகுதியில் கொல்லப்பட்ட பயங்கரவாதி குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் அஹ் வானி என்று தெரியவந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் வான்போவில் பீகாரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்களைக் கொலை செய்த குல்ஜாருக்கு உதவியவர். மேலும், வானி பாரமுல்லாவில் ஒரு கடைக்கார் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More