பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பு நடத்திய பேரணியில் திடீர் வன்முறை : காவல் துறையினர் 4 பேர் சுட்டுக் கொலை!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பு நடத்திய பேரணியின் போது, ஏற்பட்ட திடீர் வன்முறையில் காவல் துறையினர் 4 பேர் சுட்டுக் கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பான Tehreek-e-Labbaik சார்பில் லாகூரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறைக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திய சிலர் காவல் துறையினரை நோக்கி சுட்டனர்.

கற்கள் மற்றும் தடியடிகளை கொண்டும் காவலர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டதால் பேரணி நடைபெற்ற ஷேக்ப்பூரா பகுதி போர்க்களமாக மாறியது. தாக்குதலில் லாகூர் காவல்படையை சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலத்த காயம் அடைந்த 40க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் இம்ரான் கான், சட்டத்தை யாரும் கையில் எடுப்பதை பாகிஸ்தான் அரசு எப்போதும் அனுமதிக்காது என்று எச்சரித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More