போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் செல்பி எடுத்தவர் கைது!

மும்பை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுடன் செல்பி எடுத்தவர் கைது செய்யப்பட்டார். மும்பை: மும்பை அருகே கப்பலில்  போதை விருந்து நடத்தியதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் (என்சிபி) நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆர்யனின் ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆர்யன் கைதில் சாட்சியாக இருந்த கிரண் கோசாவி போதை பொருள் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ஷாரூக் கான் தரப்பிடம் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் சில அதிகாரிகளும் இதற்கு உடந்தை என்று கோசாவியின் உதவியாளரும் வழக்கின் மற்றொரு சாட்சியுமான பிரபாகர் கூறியுள்ளார். என்சிபி மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவிற்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே ஷாரூக் கானிடம் பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கில் முக்கிய சாட்சியான கிரண் கோசாவியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.உயிருக்கு ஆபத்து இருப்பதால் தலைமறைவாகி இருப்பதாகவும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் துறையிடம் சரண் அடைய இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு கோசாவி கூறி இருந்தார். இந்த நிலையில், 20 நாட்களுக்கு போலீசாருக்கு போக்கு காட்டி வந்த கோசாவியை புனே நகரத்தில் காவல் துறையினர் பொறிவைத்து பிடித்துள்ளனர்.

ஆனால் 2018ம் ஆண்டு நடைபெற்ற மோசடி வழக்கு தொடர்பாகவே அவரை கைது செய்து இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  புனேவில் இருந்து கோசாவியை மும்பைக்கு அழைத்து வந்து விசாரிக்க மராட்டிய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: