×

ரேஷன் கடைகள் மூலம் சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக திட்டம் பரிசீலனையில் உள்ளது : ஒன்றிய அரசு

டெல்லி : 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டர்களை இனி ரேஷன் கடைகளில் விநியோகிகம் செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய உணவுத்துறை செயலாளர் சுந்தான்ஷு பாண்டே மாநில அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஒன்றிய மின்னணு தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெட்ரோலிய துறை அதிகாரிகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதுமாக ரேஷன் கடைகள் மூலமாக 14. 2 கிலோவிற்கும் குறைவான சிறிய அளவிலான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை அதிகம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல ரேஷன் கடைகளில் முத்ரா திட்டத்தின் மூலமாக கடன் உதவி வழங்க மாநில அரசுகள் முன் வந்தால் உதவ தயாராக இருப்பதாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.


Tags : Government of the United States , ஒன்றிய அரசு,எரிவாயு சிலிண்டர்
× RELATED கேப்டன் வருண் சிங் பெங்களூரு...