இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,156 பேருக்கு கொரோனா; 733 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 17,095 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.56 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.42 கோடியை தாண்டியது. இன்று காலை 9.00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 16,156 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,31,809 ஆக உயர்ந்தது.

* புதிதாக 733 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,56,386 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 17,095 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,14,434 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,60,989 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 1,04,04,99,873 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 49,09,254 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Related Stories: